திருவொற்றியூர், கிண்டியில் நாளை மின்தடை

திருவொற்றியூர், கிண்டியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம்
Published on

சென்னை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் மின்பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். திருவொற்றியூர்: டி.எச் சாலை, எஸ்.பி கோவில் 1 முதல் 3-வது தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர், வடக்கு மாட தெரு, திருநகர் 1, 2-வது தெரு, கே.வி குப்பம், ஈ.எச் சாலை, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ்காந்தி நகர், டி.என்.எஸ்.சி வாரியம், சி.எம்.ஆர்.எல், காந்தி நகர், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர், திருவொற்றியூர்.

கிண்டி: ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை(ஒரு பகுதி), வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், மீனம்பாக்கம்(ஒரு பகுதி), திருவள்ளுவர் நகர், குமரன் நகர், இராணுவ காலனி, இந்திரா நகர், மத்தியாஸ் நகர் மற்றும் அதின் அருகில் உள்ள பகுதிகள். பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com