திருவண்ணாமலை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த லாரி டிரைவர் பலி

திருவண்ணாமலை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த லாரி டிரைவர் பலி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகேயுள்ள கீழ்குன்னுமுறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 34), லாரி டிரைவர். இவருடைய மனைவி பிரியா (26). இவர்களுக்கு அர்ச்சனா (1½) மற்றும் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை உள்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலையில் அன்பு இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த 80 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com