திருவண்ணாமலையில் அப்பள வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

திருவண்ணாமலையில் அப்பள வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் அப்பள வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கணசேபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). அப்பள வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை சேகர் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 60 பவுன் நகை, பணம் மற்றும் வீட்டின் பத்திரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சேகர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com