

திருவள்ளூர்:
திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்தும் தனி மனித சுதந்திரத்தை பறிப்பதை கண்டித்து திருவள்ளூரில் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் குழு மாநில செயலாளர் நீலவானத்து நிலவன், தலைமை நிலைய செயலாளர் அ.பாலசிங்கம் மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஒரகடம் குமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் ஆர்.எஸ்.எஸ்.கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் மோடி அரசு செயல்படுவதாகவும், உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
இதனால் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர் காலத்தில் இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தில் இந்த சட்டத்திற்கு தடை விதித்திருப்பது போல் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் யோகா, கவுதமன் கோபு, தளபதி சுந்தர், ஆதவன், திரூர் சங்கர், நகரச் செயலாளர் முத்தழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.