

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர்கள் இன்று ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மகபூப் ஷரிப் தலைமை தாங்கினார்.
ஒரே பதவியில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் கணினி விவரப் பணியாளரை இள நிலை உதவியாளராக நியமிக்க வேண்டும், கருணை அடிப்படையில் 15 ஆண்டுகளாக காத்திருப் போருக்கு பணி வழங்க வேண்டும், காவல் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் முரளி, துணைத் தலைவர் பாஸ்கர், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமாரன், அசோக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.