திருவள்ளூர் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

திருவள்ளூர் அருகே தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த திருவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரன் (வயது 41). நேற்று முன்தினம் இந்திரன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த திருவூர் முல்லை நகரை சேர்ந்த கண்ணன் (40) மற்றும் ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது சம்பந்தமாக இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர்.

இது குறித்து இந்திரன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜசேகர், சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com