திருவள்ளூர் அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்

திருவள்ளூர் அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த போந்தவாக்கம் கிராமத்திலிருந்து காக்களூர் தொழில்பேட்டையில் உள்ள மின் உற்பத்தி உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு 13 ஊழியர்களை வேனில் ஏற்றிக்கொண்டு அழைத்து சென்றனர்.

ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஒதப்பை அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தன லட்சுமி, ஜெயப் பிரியா உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

இதைப் பார்த்த கிராம மக்கள் காயமடைந்த 13 பேரை மீட்டு ஆட்டோக்களில் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பொன்னலூர் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com