திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
Published on

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகேயுள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாதேவி (வயது55). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அய்யாத்துரை(55), சந்தானவள்ளி(50), சுந்தரம் (35), முனீஸ்வரி(33) என்பவர்களுக்கு இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கலாதேவி வீட்டில் ஆடு மேய்ந்ததை விரட்டி விட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கலா தேவியை அய்யாத்துரை, சந்தானவள்ளி, சுந்தரம், முனீஸ்வரி ஆகியோர் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கலாதேவி திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தான வள்ளி மற்றும் சுந்தரம் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com