திருவாடானையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 6¾ பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவாடானையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
Published on

ராமநாதபுரம்:

திருவாடானை அருகே உள்ள கடம்பக்குடியைச் சேர்ந்தவர் பெரியய்யா. இவரது மகன் பாலமுருகன் (வயது 27), விவசாயி.

சம்பவத்தன்று இவர் விவசாய வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி கதவை அடைத்து விட்டு வெளியே சென்றார்.

இதனை நோட்டமிட்ட யாரோ, பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அவர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த நகையை திருடிச் சென்று விட்டனர். வெளியே சென்றவர்கள் வீடு திரும்பியபோது, கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து திருவாடானை போலீசில், பாலமுருகன் புகார் செய்தார். அதில், வீட்டில் இருந்த 6¾ பவுன் தங்க நகை திருட்டு போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வீடு புகுந்து திருடியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com