திருத்தணி அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்தது- மாணவிகள் படுகாயம்

திருத்தணி அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்தது- மாணவிகள் படுகாயம்
Published on

பள்ளிப்பட்டு:

அரக்கோணத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம்.

இன்று காலை திருத்தணி பகுதியில் இருந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரி பஸ் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

பஸ்சை கிழவனம் பகுதியை சேர்ந்த டிரைவர் வாசு ஓட்டினார். அவர் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் தனது மகன் லோகேசையும் அதே பஸ்சில் அழைத்து சென்றார். சுமார் 35 மாணவிகள் பஸ்சில் இருந்தனர்.

பெரியகடம்பூர் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் வாசு, அவரது மகன் லோகேஷ் மற்றும் மாணவிகள் காயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த 5 மாணவிகள், டிரைவர் வாசு ஆகியோர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com