திருப்பூரில் கழுத்தை அறுத்து வடமாநில தொழிலாளி கொலை

திருப்பூருக்கு வேலை தேடி வந்த ஒரே வாரத்தில் வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட நாதேஷியாம்.
கொலை செய்யப்பட்ட நாதேஷியாம்.
Published on

திருப்பூர்:

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராதேஷியாம் (வயது 40).

இவர் கடந்த வாரம் திருப்பூருக்கு வேலை தேடி வந்தார். திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பேங்க் காலனியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.

ராதேஷியாமுக்கு தெரிந்த நண்பர்களுடன் அவர் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் கனமழை பெய்தது.

அப்போது திடீரென ராதேஷியாம் மாயமானார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை தேடினர். பின்னர் அருகில் இருந்து காம்பவுண்ட் சுவற்றை எட்டிப்பார்த்தபோது ராதேஷியாம் கழுத்தை அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராதேஷி யாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் வந்த ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com