திருப்பூர் அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

திருப்பூர் அருகே ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் ரோடு குள்ளேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி அன்னபூரணி (வயது 49). இவர் முத்தனம்பாளையம் ஊராட்சி நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் தினமும் பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து முத்தனம் பாளையத்திற்கு பஸ்சில் சென்றார். பின்னர் முத்தனம்பாளையத்தில் இறங்கி பள்ளியை நோக்கி நடந்தார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் ஆசிரியை அன்னபூரணி மீது இடிப்பது போல் சென்று ஆசிரியை கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னபூரணி திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். ஆனால் அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். 

இதுகுறித்து திருப்பூர் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com