திருப்பூரில் சரக்கு வேன் மோதி முதியவர் பலி

திருப்பூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏ.வி.பி. லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணன் (வயது 78). இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அங்கு வேகமாக வந்த சரக்கு வேன் துரைக்கண்ணன் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமார்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com