திருப்பூர் அருகே தள்ளு வண்டியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி

திருப்பூர் அருகே தள்ளு வண்டியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

நல்லூர்:

திருப்பூர் முதலிபாளையம் பிரிவு, எம்.ஜி.ஆர்.நகர், பெருந்தொழுவு ரோட்டில், அண்ணமார் கோவில் அருகில் உணவகம் நடத்தி வருபவர் சித்திரைவேல் (வயது 42), உணவகம் அருகில் தள்ளுவண்டியில் வைத்து சமைத்து வாடிக்கையாளருக்கு உணவு வழங்குவது வழக்கம். அந்த தள்ளுவண்டிக்கு வெளிச்சத்திற்காக கடையில் இருந்து மின்சார இணைப்பு கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மழை காரணமாக விளக்கு சரியாக எரியாததால் மின் விளக்கை சரி செய்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வண்டியில் மின்சாரம் பாய்ந்தது. அதனால் வண்டியை தொட்டபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com