திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் போலீஸ் தடியடி- தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு உருவானது. இப்பிரச்சனையை தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைப்பதாக கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தெரிவித்தார்.
போலீசார் தடியடி நடத்திய காட்சி.
போலீசார் தடியடி நடத்திய காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் குமரன் ரோட்டில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. 11 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான விருப்ப மனு இன்று வழங்கப்பட்டது. அ.தி.மு.க. , தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மனுக்களை வாங்க திரண்டு இருந்தனர்.

அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே முதலில் விருப்ப மனு வழங்கப்பட்டதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டினர். அவர்கள் சங்கத்துக்கு வெளியே முற்றுகையில் ஈடுபட்டனர்.

உடனே அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. கும்பலாக திரண்டு சென்றதால் தள்ளு முள்ளு உருவானது. இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்க கட்டிட கதவு பூட்டப்பட்டது.

உள்ளே இருந்தவர்கள் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்த போது அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் போலீசார் தடியடி நடத்தினார்கள். விரும்ப மனு வாங்க வரிசையில் நின்றவர்களை தவிர மற்றவர்களை போலீசார் தடியடி நடத்தி வெளியே விரட்டினார்கள்.

இதனை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு உருவானது.

பிரச்சனையை தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைப்பதாக கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தெரிவித்தார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com