வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

திருப்புவனம் அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருப்புவனம்:

திருப்புவனம் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் காவேரி(வயது 39), கணேசன்(49), சிவகணேசன்(42). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது புதூர் பஜனைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(24) என்பவர் அங்கு வந்து, தனக்கும் மது தரும்படி கேட்டார். இதில் தகராறு ஏற்பட்டு காவேரி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜயை குத்தினார். இதில் காயம் ஏற்பட்ட அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், சிவகணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் கத்தி குத்துப்பட்ட அஜய், திருப்புவனம் வைகையாற்றில் கடந்தாண்டு வாலிபரை கொலை செய்து புதைத்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com