திருப்பூர் ரெயில் நிலையத்தில் சுருண்டு விழுந்து பெண் பலி

திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெண் சுருண்டு விழுந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் சுருண்டு விழுந்து பெண் பலி
Published on

திருப்பூர்:

திருப்பூர் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு 50 வயது மதிக்க தக்க பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் சுருண்டு விழுந்தார்.இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது அப்பெண் இறந்தது தெரிய வந்தது. அவர் கறுப்பு வெள்ளை மஞ்சள் பூ போட்ட சேலை அணிந்து இருந்தார். அவர் யார் ? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் அருகே உள்ள ஈங்கூர் ரெயில் நிலையம் அருகே 50 வயது மதிக்க தக்க ஆண் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com