திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பூர்:

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ. மற்றும் வருங்கால வைப்புநிதி தொகையை உறுதிபடுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் செந்தில்குமார், முத்துக்குமார், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com