திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு சங்கத்தில் பருத்தி விற்பனையை கலெக்டர் சிவனருள் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனையை கலெக்டர் சிவனருள் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனையை கலெக்டர் சிவனருள் தொடங்கி வைத்தார்.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு சங்கம் சார்பில் ஆண்டு தோறும் பருத்தி ஏல விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த பருத்தி ஏல விற்பனையில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தருமபுரி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்திகளை மூட்டை கட்டி கொண்டு வந்து மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு சங்கத்தில் கொண்டுவந்து வைப்பார்கள்.

பருத்தியை ரகம் பார்த்து கோயம்புத்தூர், அவினாசி ஈரோடு, திருப்பூர், மும்பை, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதியில் வந்த வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்வார்கள்.

அதிக விலை கேட்கும் வியாபாரிக்கு பருத்தியை வழங்கி பணம் பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்குவார்கள் ஏல விற்பனைக்கு வருகை தந்த அனைவரையும் சங்கத் தலைவர் தேவராஜன் வரவேற்றார். பருத்தி ஏலத்தை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

விவசாயிகளிடம் தங்களிடம் விளைந்த பருத்தியை பற்றி கேட்டறிந்தார். விலை என்ன போகும் என்றும் தாங்கள் விளைவித்த பருத்திக்கு விலை கிடைத்தா? தங்களுக்கு லாபம் வருகிறதா? என்று கேட்டறிந்தார். மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு சங்கத்திற்கு என்ன தேவை எனவும் கேட்டார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு வேலூர் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், துணைப் பதிவாளர் முனிராஜ், கள ஆய்வாளர் தர்மேந்திரன், துணைத் தலைவர் சாமிகண்ணு, நிர்வாக குழு உறுப்பினர்கள் வாசு, குணசேகரன், லோகநாதன், வசந்தி, விஜயகுமார், நடராஜன், பாரதி, முருகன், கமலகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் உதயகுமார், செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com