ஓடும் பஸ்சில் சென்னை பெண்ணிடம் சில்மிஷம்: திருப்பதி கோவில் ஊழியர் கைது

வெள்ளவேடு அருகே ஓடும் பஸ்சில் சென்னை பெண்ணிடம் சில்மிஷம் செய்த திருப்பதி கோவில் ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் பஸ்சில் சென்னை பெண்ணிடம் சில்மிஷம்: திருப்பதி கோவில் ஊழியர் கைது
Published on

செவ்வாப்பேட்டை:

வடபழனியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் அரசு பஸ்சில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

வெள்ளவேடை அடுத்த புதுச்சத்திரம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது, உமாசங்கரின் மனைவியிடம் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

அதிர்ச்சி அடைந்த உமா சங்கரின் மனைவி கூச்சலிட்டார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை வெள்ளவேடு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரன் என்பதும் திருப்பதி கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com