திருப்பதி அருகே ஆம்னி பஸ் மரத்தில் மோதி 15 பக்தர்கள் படுகாயம்

திருப்பதி அருகே ஆம்னி பஸ் மரத்தில் மோதிய விபத்தில் 15 பக்தர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் மோதி நொறுங்கி நின்ற ஆம்னி பஸ்.
மரத்தில் மோதி நொறுங்கி நின்ற ஆம்னி பஸ்.
Published on

திருமலை:

திருப்பதியில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 40 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் திருப்பதி கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

சித்தூர், திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் எம்.பண்டபல்லி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

பூதலப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பூதலப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com