கலெக்டர் சிவன்அருள்
கலெக்டர் சிவன்அருள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வட்ட அளவில் மக்கள் குறைதீர்வு கூட்டம்- கலெக்டர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக வட்ட அளவில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக வட்ட அளவில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் குறைதீர்வு கூட்டம் நடக்கும்.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும், ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடக்கிறது.

இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். முகாமிற்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மனுக்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com