ரெயில் மூலம் நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற நெல்லை மாணவர்கள்

மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியதை அடுத்து ரெயில் மூலம் நீட் தேர்வு எழுத நெல்லை மாணவர்கள் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர். #NEETExam2018 #NEETExamCenters #IndianGovt
கேரளாவில் நீட் தேர்வு எழுத நெல்லை வழியாக ரெயிலில் சென்ற மாணவர்கள்
கேரளாவில் நீட் தேர்வு எழுத நெல்லை வழியாக ரெயிலில் சென்ற மாணவர்கள்
Published on

இந்தியா முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் 10 பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இது போக தென் மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பல மாணவ-மாணவிகளுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம், கொச்சி, திருவனந்தபுரம் பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏராளமான மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு இங்கு தேர்வு நடத்த முடியுமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சி.பி.எஸ்.சி. நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கு எத்தனை மாணவர்கள் செல்கின்றனர் என கணக்கெடுக்கும் பணி கலெக்டர் மற்றும் கல்விதுறை அதிகாரிகள் சேகரித்தனர். இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 மாணவ-மாணவிகளுக்கு கேரளாவில் மையம் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் கேரளா செல்லும் மாணவர்களுக்கு பஸ் வசதி, தங்கும் வசதி போன்றவை அரசு சார்பில் செய்து கொடுக்க முடியுமா என்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பாளை பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பின் இறுதிநாள் வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்த கொண்டனர். அப்போது தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்கள் மொத்தமாக செல்லலாமா என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் மையம் அமைக்கப்பட்டதால் மொத்தமாக செல்லும் திட்டம் கைவிடப்பட்டு தனித்தனியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு கேரளாவுக்கு சென்றவர்கள் லாட்ஜ்களில் தங்க இடமில்லாததால் சாலையோரங்களில் தங்கி பொதுகழிப்பிடங்களை பயன்படுத்தினர். எனவே இந்தாண்டு தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்துடன் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இன்றே வெளி மாநில தேர்வு மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com