நெல்லையில் ரெயில் தடம் புரண்டது

நெல்லையில் ரெயில் தடம் புரண்டதால் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம்புரண்ட ரெயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நெல்லையில் ரெயில் தடம் புரண்டது
Published on

நெல்லை:

காந்திதாமில் இருந்து நெல்லைக்கு வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் அந்த ரெயிலை பராமரிப்பு மையத்திற்கு எடுத்துசென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் தடம்புரண்டது. பிட்லைனில் உள்ள தடுப்பில் மோதி ரெயில் நின்றது.

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம்புரண்ட ரெயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com