திருமங்கலம் அருகே லாரி மோதியதில் மின் கம்பங்கள் சேதம்- கிராமங்கள் இருளில் மூழ்கின

திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு என்ற இடத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பங்களில் மோதியது. இதில் 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
லாரி மோதியதில் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின
லாரி மோதியதில் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின
Published on

திருமங்கலம்:

கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.

திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு என்ற இடத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பங்களில் மோதியது. இதில் 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

இதனால் தோப்பூர், கூத்தியார்குண்டு, கப்பலூர், உச்சப்பட்டி, மூனாண்டி பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்குச் செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த கப்பலூர் மின் வாரிய ஊழியர்கள் மாற்று ஏற்பாடு செய்து மின் விநியோகம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com