திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் தீ
மோட்டார் சைக்கிள் தீ
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே சின்ன மறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் ரமேஷ் (வயது 33). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இவர் வழக்கம் போல் வேலை முடித்து இரவு 9 மணி அளவில் சரக்கு வாகனத்தை வேன் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தை (பல்சர்) வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மளமளவென எரிந்து கொண்டிருந்தது உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக ரமேஷ் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் முன்பு வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எரித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com