மது போதையில் முதியவரிடம் தகராறில் ஈடுப்பட்ட வாலிபர் கைது

மது போதையில் முதியவரிடம் தகராறில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 64). இவர் சம்பவத்தன்று திமிராயசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் தகாத முறையில் பேசியுள்ளார். இதுக்குறித்து செல்வராஜ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப்- இன்ஸ்பெக்டர் பாத்திமா வாலிபரை பிடித்து விசாரித்ததில். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பது தெரியவந்தது. ஸ்ரீரங்கம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com