திருச்சி அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை
Published on

திருச்சி:

திருச்சி கருமண்டபம் சோதனைச்சாவடி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அப்துல்ரகீம். இவருடைய மகன் மாலிக் பைரோஸ்(வயது 28). என்ஜினீயரான இவர், மாலத்தீவுக்கு சென்று அங்கு பணியாற்றி வந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் தூங்க சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், மாலிக் பைரோஸ் வேலைக்கு செல்லாததால் பெற்றோருக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று மனவருத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தூக்குப்போட்டு இறந்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com