திருச்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

திருச்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை மாறன்குளம் இனாம்புலியூரை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 42). இவரது மனைவி பூமதி(37). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களில் மூத்த மகளுக்கு சொந்தத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதில், பூமதிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மனவேதனையில் இருந்த அவர் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை, உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று பூமதி உயிரிழந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com