திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றிரவு திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த நசீர்கான் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர், ரூ.8.44 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பில், சவுதி ரியால் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததும், அதனை கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் நசீர்கானிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com