வானூர் அருகே டிப்பர் லாரியில் குழாங்கற்கள் கடத்திய டிரைவர் கைது

வானூர் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிப்பர் லாரியில் குழாங்கற்கள் கடத்திய டிரைவரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ராயபுதுபாக்கம் பகுதியில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ஒரு டிப்பர் லாரி குழாங்கற்கள் ஏற்றி வந்து கொண்டிருந்தது. அந்த டிப்பர் லாரியை போலீசார் தடுத்து  நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதி இன்றி குழாங்கற்கள் கடத்தியது தெரியவந்தது. அந்த டிப்பர் லாரியை ராயபுதுபாக்கம் அடுத்துள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். 

இதையடுத்து போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரியும், குழாங்கற்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com