ஆலங்குடி அருகே டிப்பர் லாரி மோதி முதியவர் பலி

ஆலங்குடி அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் சேந்தமங்கலம் ஐ.டி.ஐ. காலனியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவர் புதுக்கோட்டை சென்று விட்டு அங்கிருந்து நேற்று காலை ஸ்கூட்டரில் ஆலங்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆலங்குடி கோவிலூர் நான்கு ரோடு அருகே வந்தபோது பட்டுக்கோட்டையில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிப்பர் லாரி டிரைவர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவிலை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com