போச்சம்பள்ளி அருகே டிப்பர் லாரி மோதி கூலித்தொழிலாளி பலி

போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியானார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
விபத்து
விபத்து
Published on

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த தளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவருக்கு சரசு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கூலித்தொழிலாளியான மாது நேற்று தனது நண்பர் மயில்சாமியுடன் காவேரிப்பட்டணம் வரை மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் இரவு ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது தளிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர்லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிகிச்சைக்காக மயில்சாமியை பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியிலும், மாதுவை சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். மாது சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com