தூத்துக்குடியில் டிப்பர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் ஏசுவடியான் (வயது 33). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஏசுவடியான் தனது நண்பரான பாக்கியராஜுடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நண்பர்கள் சிதம்பரநகர் விலக்கில் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட ஏசுவடியான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பாக்கியராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த தென்பாகம் போலீசார் லாரியை ஓட்டி வந்த எட்டயபுரத்தை சேர்ந்த ஆறுமுகசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com