திண்டிவனம் அருகே மினிவேன் மீது ஆம்னி பஸ் மோதல்- வாலிபர் பலி

திண்டிவனம் அருகே இன்று அதிகாலை மினி வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம் அருகே மினிவேன் மீது ஆம்னி பஸ் மோதல்- வாலிபர் பலி
Published on

திண்டிவனம்:

சென்னை ஆவடியை சேர்ந்தவர் அனஸ் (வயது 20). இவர் மினி வேன் டிரைவர்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்பாஷித் (20), பீர்முகைதீன் (24) ஆகியோர் ஒரு மினி வேனில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர்.

மாநாடு முடிந்ததும் நேற்று நள்ளிரவு அவர்கள் மினி வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். வேனை அனஸ் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு அவர்கள் வந்த மினி வேன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் முன்னால் சென்ற மினிவேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மினி வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த அனஸ் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் இந்த விபத்தில் வேனில் இருந்த அப்துல்பாஷித், பீர்முகைதீன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com