திண்டிவனம் அருகே சத்துணவு அமைப்பாளருக்கு சரமாரி அரிவாள்வெட்டு- கணவர் வெறிச்செயல்

திண்டிவனம் அருகே குடும்ப தகராறு காரணமாக சத்துணவு அமைப்பாளரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே சத்துணவு அமைப்பாளருக்கு சரமாரி அரிவாள்வெட்டு- கணவர் வெறிச்செயல்
Published on

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் வளர்குமார். இவரது மனைவி பூங்கொடி (வயது 38).

இவர் கொணக்கம்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

பூங்கொடிக்கும், கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த வாலிபரை வளர்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இது தொடர்பாக மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் இந்த புகார் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் பூங்கொடிக்கும், கணவர் வளர்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வளர்குமார், மனைவி பூங்கொடியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

மனைவி இறந்து விட்டாள் என்று நினைத்த வளர்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பூங்கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வளர்குமாரை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com