வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் 3.10.2017 முதல் 31.10.2017 வரை பெறப்பட்டது.

தற்போது தேர்தல் ஆணையம் வரும் 30-ந்தேதி வரை மனுக்கள் பெறும் காலத்தினை நீடித்துள்ளது. தகுந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6ம், வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்கள், நிரந்தரமாக வெளியூர் சென்ற நபர்களின் பெயர்களை நீக்க படிவம்-7ம், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் விவரங்களை திருத்தம் செய்ய படிவம்-8ம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று பின் அதே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்தால் படிவம் -8ஏ பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளர்கள் இணையதள முகவரி மூலமும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com