விராட் கோலியுடன் வார்த்தைப்போரில் சமரசமா?: மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டுக்கு டிம் பெய்ன் பதில்

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களிடம் வார்த்தைப் போரில் ஈடுபடுவதில்லை என்ற கிளார்க்கின் குற்றச்சாட்டை டிம் பெய்ன் மறுத்துள்ளார்.
விராட் கோலி
விராட் கோலி
Published on

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களிடம் போட்டியின்போது வார்த்தைப் போரில் ஈடுபட பயப்படுகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் பதில் அளிக்கையில் ‘‘விராட் கோலிக்கு ஆதரவாகவோ, அல்லது அவரை அவுட்டாக்க முயற்சி செய்யக்கூடாது என்றோ, அல்லது வேறு மாதிரியோ நாங்கள் சிந்தித்ததே கிடையாது.

அவருக்கு ஆதரவாக நாங்கள் செல்கிறோமா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. நாங்கள் நிச்சயமாக அவருடன் எந்தவொரு வார்த்தைப்போரில் ஈடுபட விரும்பவில்லை என்பதை விட, விராட் கோலி அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதில் உறுதியாக நினைக்கிறோம்.

வருகின்ற தொடரில் எப்படி இருக்கம் என்று யாருக்கும் தெரியாது. கடந்த தொடரில் ஏராளமான வார்த்தை போர் இருக்கத்தான் செய்தது. என்ன இருந்தாலும் பழைய ஆட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்க விரும்பில்லை. தற்போதைய நிலையில் ஐபிஎல் எனக்கு மிகப்பெரிய பின்னடைவு இல்லை. அதனால் நான் இழப்பதற்கு ஏதும் இல்லை’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com