ஓசூரில் டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

ஓசூரில் இன்று காலை டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
ஓசூரில் டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அவுசிங் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். தொழில் அதிபரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து ஓசூர், பாகலூர் சாலையில் உள்ள என்.ஜி.ஓ .காலனியில் டைல்ஸ் மற்றும் சமையல் அறை-குளியல் அறை சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். 

இந்தக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து அவர்கள் ஓசூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தீ கொளுந்து விட்டு எரிந்ததால் உடடினயாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைக்குள் புகைமண்டலம் அதிகமாக இருந்தது. இதனால் கடையின் மேல் பகுதியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து விட்டு பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினார்கள். மின்சார கசிவு காரணமாக  இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews                    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com