பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தானை தளமாக கொண்ட 18 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மேலும் 18 நபர்களை பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
சையத் சலாவுதின்
சையத் சலாவுதின்
Published on

புதுடெல்லி:

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மேலும் 18 நபர்களை பயங்கரவாதிகள் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, 2019 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு நபரை பயங்கரவாதியாக நியமிக்கும் ஏற்பாட்டை உள்ளடக்கியதாக யுஏபிஏ- சட்டத்தை திருத்தியுள்ளது. இந்த திருத்தத்திற்கு முன்னர், அமைப்புகளை மட்டுமே பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்க முடியும். தற்போது தனி மனிதர்களையும் பயங்கர்வாதிகளாக அறிவிக்க முடியும்.

அந்த அடிப்படையில்  மேலும் 18 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சையத் சலாவுதீன், இந்திய முஜாகிதீன் ரியாஸ் மற்றும் இக்பால் பட்கல், தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளர் சோட்டா ஷகீல் ஆகியோரும் அடங்குவர்.

ஜெர்மன் பேக்கரி (2010), சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூர் (2010), ஜமா மஸ்ஜித் (2010) ), ஷீட்லகாட் (2010) மற்றும் மும்பை (2011). 1999-ம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்கள் என இதில் சம்பந்தப்பட்ட அப்துல் ரவூப் அஸ்கர், இப்ராஹிம் அதர் மற்றும் யூசுப் அசார் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com