மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 3-ந்தேதி தொடக்கம்

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தேசிய புலிகள் ஆணையம் சார்பில் வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 3-ந்தேதி தொடக்கம்
Published on

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தேசிய புலிகள் ஆணையம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. இதனை முன்னிட்டு வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் களக்காடு தலையணையில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ தலைமை வகித்தார்.

வனசரக அலுவலர்கள் திருக்குறுங்குடி புகழேந்தி, கோதையாறு நடராஜன் முன்னிலை வகித்தனர். இதில் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு, சரகங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com