4 ஆண்டுகளுக்கு பின் பெரியாறு சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பு

பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கெடுப்பு தொடங்கியது. இதற்காக அதி நவீன 504 கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது.
4 ஆண்டுகளுக்கு பின் பெரியாறு சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பு
Published on

கூடலூர்:

கேரள மாநிலம் இடுக்கி மற்றும பத்தினம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணாலயம் 925 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்துக்கு உலக வங்கி ஆண்டுதோறும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கி வருகிறது.

புலிகளை பாதுகாப்பதற்காகவும், கணக்கெடுப்பதற்காகவும் புலிகள் வாழ்வாதாரம் அழிவதை தடுக்கவும் இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு நடந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

பெரியாறு, தேக்கடி, வல்லக்கடவு எல்லைகளை 59 மண்டலங்களாக பிரித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது இதற்காக 198 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களில் புலிகளின் கால்தடம், மரங்களில் நகங்களால் கீறிய கோடு, எச்சம் மற்றும் புலிகளுக்கு இரையாகும் விலங்குகளும் கணக்கெடுக்கப்படுகின்றன.

வரும் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் முதல் முறையாக செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தகவல்கள் பெரியாறு புலிகள் கன்சர்வேசன் பவுண்டேசனில் பதிவு செய்யப்படும்.

அடுத்த 3 நாட்கள் புலிகளின் நடமாட்டம் கூடுதலாக அறியப்படும் பகுதியில் தரையில் இருந்து 2½ அடி உயரத்தில் தானியங்கி கேமரா நிறுவப்படுகிறது. 180 டிகிரி விரிவான லென்ஸ்கள் உள்ள இந்த கேமராக்களில் உள்ள சென்சார் அதை கடந்து செல்லும் விலங்குகளை படம் பிடித்து மெமரி கார்டில் பதியும் விபரங்கள் ேதிசிய புலிகள் கன்சர்வே‌ஷன் அதாரிட்டியிடம் (என்.டி.சி.ஏ.) வழங்கப்படும். அவர்கள் புலிகளின் மீதுள்ள கோடுகளை வைத்து ஆராய்ந்து அதன் எண்ணிக்கையை கணக்கெடுத்து தெரிவிப்பார்கள்.

2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 26 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 32 புலிகள் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் அதி நவீன 504 டிஜிட்டல் கேமராக்கள் 925 சதுர கி.மீ சுற்றளவில் நிறுவப்படுகிறது.

கடந்த 1 மாத காலமாக கேமரா டிராப் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பறவைகள், வன விலங்குகள் என 1 லட்சத்து 32 ஆயிரம் படங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் புலிகளின் படங்கள் மட்டும் 450 பதிவாகியுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புலிகளின் உருவ அமைப்பு, உடலில் உள்ள கோடுகளை வைத்து ஆய்வு செய்து அ ங்கு 40 முதல் 45 புலிகள் வரை உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com