சென்னையில் முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

சென்னையில் நடைபெற உள்ள இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்
வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்
Published on

சென்னை:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் முடிவடைந்த பின்னர், டிசம்பர் 15-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் தொடங்குகிறது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 1200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ, 6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை காண காலை முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com