துவாக்குடி அருகே புரோட்டா மாஸ்டர் தற்கொலை

துவாக்குடி அருகே புரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

துவாக்குடி:

காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). புரோட்டா மாஸ்டர். இவருடைய மனைவி தீபா. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் தீபா கோபித்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவியை பிரிந்த ஏக்கத்தில், இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com