துறையூர் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

துறையூர் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

துறையூர்:

துறையூரில் சாமிநாதன் நகரை சேர்ந்தவர் மளிகை கடை உரிமையாளர் விசுவநாதன். இவர் துறையூர் பெரிய கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை அவர் தனது மனைவி செல்வியுடன் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அவர்களின் மகனும், மகளும் மளிகைக்கடைக்கு சென்றுவிட்டனர். இந்தநிலையில் மாலையில் விசுவநாதன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com