துறையூரில் வெயில் கொடுமையால் மூதாட்டி பலி

துறையூரில் வெயில் கொடுமையால் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

துறையூர்:

தமிழகம் முழுவதும்கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயில் பொது மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 60). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி, துறையூர் அரசு மருத்துவமனைபகுதியில் தங்கியிருந்து, தன்னார்வலர்கள் தரும் உணவைஉண்டு ரோட்டோரத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒருவீட்டில் தண்ணீர் வாங்கிக்குடித்து விட்டு, நடந்து சென்ற போது ,வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும்துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாப்பம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வெயில்கொடுமையால் மூதாட்டி பலியானது துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com