ஜம்மு - காஷ்மீர்: பாராமுல்லா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு - காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர்: பாராமுல்லா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கன்சார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை மடக்கி பிடித்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்து உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் வடக்கு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com