தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

தேனி:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள அருகவேலி பகுதியை சேர்ந்தவர் நமக்கொடி(47). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். நமக்கொடிக்கு கண்பார்வை குறைபாடு இருந்து வந்தது. மேலும் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ஞானசேகர் கொடுத்த புகாரின்பேரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி சுப்புராஜ்நகர் புதுக்காலனி 7-வது வார்டை சேர்ந்தவர் ராஜகோபால் (74). இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்து வந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் நாகமணி கொடுத்த புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அரண்மனைப்புதூர் கிழக்கு தெருவைசேர்ந்தவர் பாண்டித்துரை. சம்பவத்தன்று சமதர்மபுரத்தில் உள்ள பருப்பு மில் அருகே நின்றுகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் க.விலக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவர் மனைவி ராஜலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com