ஆண்டிப்பட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள குமணன்தொழு மன்னூத்து பகுதியை சேர்ந்தவர் மொக்கையன் (வயது45). இவர் வெள்ளிமலை எஸ்டேட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவருக்கு இருமல் இருந்ததால் வீட்டில் இருந்த கால் வலி தைலத்தை டானிக் என நினைத்து குடித்து விட்டார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு கடமலைக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜதானி அருகில் உள்ள மத்துசங்கிலிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித் (24). இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்டு கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்தார். வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி வந்தார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்து விட்டார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜதானி அருகில் உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (58). குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கராஜ் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com