திருச்சி: 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணிகள் தீவிரம்

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள பகுதியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி: 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணிகள் தீவிரம்
Published on

திருச்சி:

திருச்சியில் மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், மூன்று வாகனங்களில் வந்த 20 மீட்புப்படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் இடுபட்டு வருகின்றனர்.

கட்டிட இடிபாடுகளில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்து பேர் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிடங்களை தகர்த்து சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நிறைவடைய வாய்ப்பு இருப்பதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com